Pudumai
ISBN 9789358782066

Highlights

Notes

  

என்னுரை

இந்த புத்தகம் எனக்கு மிகவும் நெருக்கமான புத்தகம். என் மனதையும் ஆன்மாவையும் இதில் பதித்திருப்பதால் இந்தப் புத்தகம் என்னுடைய தனிப்பட்ட விருப்பமான புத்தகமாக இருக்கும். நான் இந்திய வரலாற்றின் தீவிர ரசிகன், மிகுந்த ஆர்வம் உள்ளவன். நானும் என் போல் அனைவரும் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் அனுபவித்த சில போராட்டங்களை இந்த புத்தகம் மூலம் முன்வைக்க என்னால் முடிந்தவரை முயற்சித்து இருக்கிறேன். இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து சம்பவங்களும் கடந்த காலத்தில் இருந்து வந்தவை, ஆனால் எனது சொந்த கற்பனையுடன் காட்சிகளை மீண்டும் உருவாக்க ஒரு கதாசிரியரின் சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டேன். இந்த முயற்சியில் யாருடைய உணர்வுகளாவது புண்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் உண்மைகளை நான் தவறாகக் கருதியிருந்தாலோ மன்னிக்கவும். இந்த அறிவியல் - வரலாற்று - கற்பனைக் கதையின் நோக்கம், சுதந்திரம் பெறுவதற்காக நம் முன்னோர்கள் எதிர்கொண்ட சவால்களும் சித்திரவதைகளையும் இயன்றவரை எடுத்துரைக்கவே. இந்த புத்தகம் படித்தபின்பு உங்கள்மனதில், நம் தாய் திருநாட்டின் மேல் பற்றும், பக்தியும், நமது போராட்ட வீரர்களின் பால் பெருமையும் மனதில் தோன்றினால், எனது இந்த புதுமையான முயற்சி வெற்றி பெற்றதாக நான் கருதுவேன்.

இந்தியில் ஒரு சொற்றொடர் வரும் “யாத் ரஹோ, ஏக் சாதி அவுர் பீ தா! அதாவது, “நினைவில் கொள்ளுங்கள், இன்னொரு நண்பரும் இருந்தார்!”.