Pudumai
ISBN 9789358782066

Highlights

Notes

  

அத்தியாயம் 5: வெள்ளையனே வெளியேறு இயக்கம்

எனக்கு உடனடியாக வீட்டிற்கு சென்று என் அனுபவங்களை பகிர ஆவல் மிகுதியாயிற்று.

நாங்கள் மீண்டும் பழமையான இந்தியாவில் இறங்கினோம்! அது இரண்டாம் உலகப் போரின் சமயம். இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்க உள்ள தருணம்…

எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அத்தை பொத்தானை அழுத்த முயற்சித்தார், ஆனால் அது எனக்கு ஆர்வம் மிகுதியாய் இருந்தது. நான் குதூகலமாய் அத்தையிடம் சொன்னேன், “அத்தை நாம் இதையும் வேடிக்கை பார்ப்போம். இல்லை, நான் வேடிக்கை பார்க்கிறேன் நீங்கள் பழுது பாருங்கள்!” என்று சொல்லிவிட்டு நிகழ்வுகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

1942 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நாங்கள் இருந்தோம். அகில இந்திய மாநாட்டுக் குழு அமர்வின் போது மகாத்மா காந்தியையும் பண்டிட் ஜவஹர்லால் நேருவையும் நான் பார்த்தேன். அகில இந்திய காங்கிரஸ் அமர்வின் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத், பல்வேறு தலைவர்களுடன் அங்கு இருந்தார். நாங்கள் காத்திருந்து முழு அமர்வையும் பார்த்தோம், அது நள்ளிரவைக் கடந்து மறுநாள் வரை தொடர்ந்தது. நிறைய பேசிக்கொண்டு இருந்தனர்.

“காந்திஜி, தீர்மானத்தை நிறைவேற்றலாமா?”

“ஆம், அதைத் தொடங்குவோம்.”

“இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இந்த வெள்ளைக்கார துரைகள் வெளியேற மாட்டார்கள்.”

“ஐயா”, ஒரு இளைஞன் அழைத்தான்.

“ஆம், மெஹரல்லி. உன் மனதில் ஏதாவது இருக்கிறதா?”

“ஆமாம் ஐயா. இந்த இயக்கத்திற்கு பாரத் சோடோ அந்தோலன் (Bharath chodo andolan) - வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று பெயரிடுவோம்.”

யூசுப் மெஹரல்லி - ஒரு தொழிற்சங்கவாதி மற்றும் அப்போதைய பம்பாய் மேயர். அவர் தான் அன்றைய சைமன் கோ பேக் என்ற வார்த்தையையும் உருவாக்கினார். இப்பொழுது வெள்ளையனே வெளியேறு கோஷத்தையும் உருவாக்கியுள்ளார்.

காந்தியும் அவரது குழுவினரும் காரில் ஏறி, அருகிலுள்ள மைதானத்திற்கு சென்றனர், அங்கு மகாத்மா காந்திக்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர்.

நான் கூர்ந்து கவனித்தேன். அது கோவாலியா டேங்க் மைதானம்.

பாபுஜி வழக்கம் போல் வெள்ளை காதி அணிந்து பேசினார். ஆங்கிலம் மற்றும் ஹிந்துஸ்தானி மொழிகளில் மாறி மாறி பேசினார்.

“ஆஹா என்ன ஒரு உத்தி! இவரின் சம்பாஷணை பரந்த பார்வையாளர்களை அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு பேச்சு.” நான் நினைத்தேன்.

காந்திஜி வேண்டுகோள் விடுத்தார், “நாம் நம் இதயங்களினால் இணைவோம். நம்மில் ஒற்றுமை ஓங்கட்டும். சுதந்திரத்திற்கான போராட்டத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு முயற்சி தான் வெற்றி தரும்.”

“நாம் இந்தியாவை விடுவிப்போம் அல்லது முயற்சியில் இறப்போம், நம் அடிமைத்தனம் நிரந்தரமாக இருப்பதைக் காண நாம் வாழ கூடாது. சுதந்திரம் அடையும் வரை நாம் ஓயமாட்டோம் என்றும், அதை அடைவதற்கான முயற்சியில் நம் உயிரைக் கொடுக்கத் தயார் என்றும் கடவுளையும், அவரவரது மனசாட்சியையும் சாட்சியாகக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.”

சில நேரத்திற்குள் ஒரு பெண் கூட்டத்தை வழிநடத்துவதை நான் பார்த்தேன். நான் அவர்களை அடையாளம் கண்டுகொண்டேன். கிராண்ட் ஓல்ட் லேடி. ஆம்! அருணா ஆசப் அலி கட்சியின் எஞ்சிய பகுதிக்கு தலைமை தாங்கி, கோவாலியா டேங்க் மைதானத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வழி நடத்தினார்.

“வெள்ளையனே வெளியேறு!”

இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த போலீஸ்காரர்களும், பிரிட்டிஷ் அதிகாரிகளும் பயத்தில் வெளுத்துப் போனார்கள்.

“அட கடவுளே, இது மறைமுக அச்சுறுத்தலா?”

வாக்கி டாக்கீஸ் ஒலித்தது. அங்கு ஒரு வகையான பதற்றம் பரவுவதை உணர்ந்தேன்.

ஒரு மூத்த அதிகாரி, “டியர் கேஸ் (Tear Gas)” என்று கத்தினார்.

கோவாலியாவில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

ஆங்கிலேயர்களின் போர் இராணுவத்திற்கு இந்திய ஆதரவைப் பெறுவதில் கிரிப்ஸ் மிஷன் தோல்வியடைந்த பிறகு, காந்தி கோவாலியா டேங்க் மைதானத்தில் தனது வெள்ளையனே வெளியேறு உரையில் செய் அல்லது செத்து மடி என்று அழைப்பு விடுத்தார்.

புதுமை அதிர்ந்தது. வேறொரு காட்சிக்கு நேரமாகிவிட்டது என்று நினைத்தோம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியது. இந்த இயக்கத்தைத் தொடர்ந்து ரயில் நிலையங்கள், தந்தி அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் காலனித்துவ ஆட்சியின் பிற தூண்களில் பெரிய அளவிலான வன்முறைகள் நடந்தன. கொள்ளையடித்தல் போன்ற செயல்கள் நிறைய நடந்தன, மேலும் இந்த வன்முறை செயல்களுக்கு அரசாங்கம் காந்தியை காரணம் காட்டியது. அவரையே பொறுப்பாக்கியது. இருப்பினும், முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர், காங்கிரஸை முழுக்க அழிக்க முற்பட்டது ஆங்கிலேய அரசு. இந்த வன்முறை இயக்கத்தின் எச்சங்களை அகற்ற காவல்துறை மற்றும் ஆங்கிலேய இந்திய இராணுவம் கொண்டுவரப்பட்டது.

பனாரஸ் பல்கலைக்கழகத்தின் போராளி மாணவர்களும் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில், இந்த இயக்கம் மிக வேகமாக கிராமங்களுக்குப் பரவி மக்களின் ஆதரவைப் பெற்றது. ஜெயபிரகாஷ் நாராயண் போன்ற போராளிகள் கிழக்கு உ.பி மற்றும் பீகாரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வைப் பரப்பினர்.

புதுமை மீண்டும் குலுங்கியது. ஆம், இன்னொரு காட்சிக்கான நேரம் என அறிந்து கொண்டோம்.

இதற்கிடையில், நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் எங்கோ, புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தேசபக்தியின் மீதான தனது கடுமையான சாய்வால் சுதந்திர இயக்கத்தைத் தூண்டினார்.

“ஏய், கைது செய்யப்பட்டதில் இருந்து நமது தலைவர் சுபாஷ் ஐயா எங்குமே காணோம் போல் தெரிகிறது!”.

“அவராவது பின் வாங்குவதாவது! இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் வானொலியில் பேசினார், நாங்கள் அனைவரும் அவரைக் கேட்டோம்.”

நேதாஜி ஆசாத் ஹிந்த் வானொலி மூலம் பேசிக் கொண்டிருந்தார். தலைவரின் குரல் கேட்டது. அவரின் குரலில் நான் மெய்சிலிர்த்துப்போனேன். நாடு முழுவதும் அவர் பேச்சைக் கேட்டது. மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்ததைக் காண முடிந்தது.

“கடந்த ஆண்டு நான் இந்தியாவை விட்டு வெளியேறியதில் இருந்து, பிரிட்டிஷ் பிரச்சார செய்திகள் நான் இருக்கும் இடம் குறித்து அவ்வப்போது முரண்பாடான அறிக்கைகளை அளித்து வருகின்றன, அதே நேரத்தில் இங்கிலாந்தில் உள்ள செய்தித்தாள்கள் என்னைப் பற்றி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. எனது மரணம் பற்றிய சமீபத்திய அறிக்கை ஒருவேளை அவர்களின் ஆசைக்குரிய ஒரு நிகழ்வாக இருக்கலாம். ஆங்கிலேய அரசாங்கம், இந்திய வரலாற்றில் இந்த இக்கட்டான நேரத்தில், நான் இறந்து கிடப்பதைப் பார்க்க விரும்புகிறது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, ஏனெனில் அவர்கள் இப்போது தங்கள் ஏகாதிபத்தியப் போரின் நோக்கத்திற்காக இந்தியாவைத் தங்கள் பக்கம் கொண்டு வரத் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்து வருகின்றனர்….”

நேதாஜி ஜப்பான், பர்மா போன்ற நாடுகளை அடைந்தார், அங்கு அவர் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களை வீழ்த்த இந்திய தேசிய இராணுவத்தை (INA) ஏற்பாடு செய்தார். இந்திய நாட்டிலும் அண்டை நாட்டிலும் பெண்கள் உட்பட பலர் இந்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்.

“எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம்த் தருகிறேன்” - என்ற நேதாஜியின் வீர முழக்கம் எங்கும் எதிலும் எதிரொலித்தது.

“It will be a fatal mistake for you to wish to live and see India free simply because victory is now within reach. No one here should have the desire to live to enjoy freedom. A long fight is still in front of us. We should have but one desire today, the desire to die so that India may live, the desire to face a martyr’s death so that the path to freedom may be paved with the martyr’s blood. Friends! My comrades in the War of Liberation! Today I demand of you one thing above all. I demand of you blood. It is blood alone that can avenge the blood that the enemy has spilt. It is blood alone that can pay the price of freedom. Give me blood and I promise you freedom.”

நேதாஜியின் மிகவும் பிரபலமான அறிக்கைகள், ஆங்கிலேயருக்கு எதிரான அவரது சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடன் சேருமாறு இந்திய மக்களை தூண்டியது.

சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானின் உதவியுடன் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிடத் தொடங்கினார், இதன் காரணமாக அவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவித்து இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்குள் நுழைந்தார்.

நேதாஜி பின்னர் பர்மாவிற்கும், உலகெங்கிலும் பிரிட்டனை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கு நட்பு நாடுகளை நாடினார். ஆங்காங்கே காரசாரமான பேச்சுக்களை பேசி மக்களை இந்திய சுதந்திரத்திற்காகப் போராடத் தூண்டிக் கொண்டு இருந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றிணைத்த பசையாக இருந்தது வெள்ளையனே வெளியேறு இயக்கம். பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் 1944 வாக்கில் நசுக்கப்பட்டன.

1944-ல் விடுதலையான பிறகு, ஆங்கிலேயருக்கு எதிரான தனது எதிர்ப்பைத் தொடர்ந்த காந்தி, 21 நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, பிரிட்டன் மிகவும் பலவீனமடைந்தது.

Reports say that

“By the end of World War II, Britain’s place in the world had changed dramatically and the demand for independence could no longer be ignored. It owed huge sums of money to the USA and also to India in the form of sterling balances. These were sums of money that Britain owed to India for the raw materials and finished goods the British government in India bought during the war years. Britain was unable to play the role in the colonial world that it had during the interwar period. The transformation of Britain also took place owing to the churning of society that occurred because of the war. Full employment and economic welfare became more important objectives of policy than the preservation of the Empire.”

இரண்டாம் உலகப் போரின் முடிவில், தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சிக்கு வந்தது. இந்திய மக்களின் சுதந்திரத்தைப் பெறுவதற்குத் தொழிலாளர் கட்சி பெரிதும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தது.

இந்திய அரசியலமைப்பை உருவாக்க ஜூலை 1946 இல் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 26, 1949 அன்று, இந்திய அரசியலமைப்பு இந்த சபையால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனவரி 26, 1950 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனது சிறந்த பங்களிப்பிற்காக இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

மார்ச் 1946 இல், ஒரு அமைச்சரவை குழு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது, இது ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், “மாகாண சட்டமன்றங்கள் மற்றும் இந்திய மாநிலங்களின் வேட்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பு சபையை கூட்டுவதற்கும் முன்மொழிந்தது. ஜவஹர்லால் நேரு தலைமையில் ஒரு அரசு அமைந்தது.

இருப்பினும், முஸ்லீம் லீக் அரசியலமைப்பு சபையில் பங்கேற்க மறுத்து, முஸ்லிம்களுக்கு மட்டும் பாகிஸ்தான் தனி நாடு வேண்டும் என்று வாதிட்டது.

இந்தியாவின் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்தை வகுத்தார்.

முஸ்லீம் லீக் மிகவும் விடாமுயற்சியுடன் இருந்ததாலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தியத் தலைவர்கள் பிரிவினையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆகஸ்ட் 14, 1947 அன்று நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானார் மற்றும் 1964 வரை தனது பதவிக் காலத்தை தொடர்ந்தார்.

ஜவஹர்லால் நேரு, இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று இரவு ஆற்றிய உரையால் பிரபலமானவர்.

Tryst with Destiny:

Long years ago we made a tryst with destiny, and now the time comes when we will redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends and when the soul of a nation, long suppressed, finds utterance.... We end today a period of ill fortune, and India discovers herself again.

இருப்பினும், பிரிவினை ஒரு பயங்கரமான மற்றும் இரத்தக்களரி நிகழ்வாக இருந்தது, இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைகள் இந்தியாவின் இதயத்திலும் ஆன்மாவிலும் பிளவை ஏற்படுத்தியது.

சுதந்திர தினத்தைப் பற்றி மக்கள் அதிகம் சிந்திப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த போராட்டத்தைப் பார்த்த பிறகு, சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள் எப்படி மகிழ்ந்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

பல போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததை விட இப்போது நிறைய முன்னேற்றம் மற்றும் புதுமைகளுடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது.

அத்தை கடைசி பொத்தானை அழுத்திவிட்டு வீட்டிற்குச் செல்லத் தயாராய் இருந்தார்கள்.